உள்ளடக்கத்துக்குச் செல்

திருத்தந்தை பதினான்காம் லியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதினான்காம் லியோ
14-ஆம் சிங்கராயர்
திருத்தந்தை
Image
Image
சபைகத்தோலிக்க திருச்சபை
ஆட்சி துவக்கம்மே 8, 2025
முன்னிருந்தவர்பிரான்சிசு
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடுசூன் 19, 1982
சான் சாடோ-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவுதிசம்பர் 12, 2014
யேம்சு கிரீன்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டதுசெப்டம்பர் 30, 2023
பிரான்சிசு-ஆல்
கர்தினால் குழாம் அணி
பிற தகவல்கள்
இயற்பெயர்இராபர்ட் பிரான்சிசு பிரிவோசுட்
பிறப்புசெப்டம்பர் 14, 1955 (1955-09-14) (அகவை 70)
சிகாகோ, ஐ.அ
குடியுரிமை
  • ஐக்கிய அமெரிக்கா
  • பெரு (2015 முதல்)
வகித்த பதவிகள்
கல்வி
குறிக்கோளுரைIn illo Uno unum
ஒரே கிறிஸ்துவில் நாம் ஒன்றாக
கையொப்பம்திருத்தந்தை பதினான்காம் லியோ-இன் கையொப்பம்
லியோ என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

பதினான்காம் திருத்தந்தை லியோ (Leo XIV), தமிழில் பதினான்காம் சிங்கராயர், இயற்பெயர்: இராபர்ட் பிரான்சிசு பிரீவோஸ்ட், (Robert Francis Prevost, பிறப்பு: 14 செப்டம்பர் 1955)[1] கத்தோலிக்கத் திருஅவையின் தலைவரும், வத்திக்கான் நகர அரசின் இறையாண்மையாளரும் ஆவார். திருத்தந்தை பிரான்சிசு இறந்ததைத் தொடர்ந்து, 2025 மே 8 அன்று நடைபெற்ற மாநாட்டில் இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலினொய், சிகாகோவில் பிறந்த இவர் அகத்தீனியத் துறவி ஆவார். பெருவில் 1985 முதல் 1986 வரையும், பின்னர் 1988 முதல் 1998 வரையிலும் பங்கு குருவாகவும், மறைமாவட்ட அலுவலராகவும், குருமட ஆசிரியராகவும், மறைமாவட்ட நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். 2023இல் கர்தினாலாக இவர் நியமிக்கப்பட்டார். ஆயர்களுக்காக திருப்பீட பேராயத்தின் தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவுக்காக திருப்பீடக் குழுவின் தலைவராகவும் 2023 முதல் இவர் பணியாற்றி வருகின்றார். சிக்லேயோ மறைமாவட்ட ஆயராக 2015 முதல் 2025 வரையிலும், 2001 முதல் 2013 வரை அகுஸ்தினார் சபையின் மாநிலத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.[2][3][4]

2025 மே 8 அன்று, பதினான்காம் லியோ (பதினான்காம் சிங்கராயர்) என்ற ஆட்சிப்பெயரை ஏற்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் பிறந்த இவர் ஒரு பெரு குடிமகனும் ஆவார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
    1. Old Video of New Pope Leo XIV- Greeting from Bishop of Chiclayo, Mons. Robert Prevost Martínez (OSA) (Video). Chalice Canada. May 8, 2025. Retrieved May 9, 2025 via YouTube.
    2. "Who Could Be the Next Pope? These Are the Names to Know". Time. மே 6, 2025. Archived from the original on 2025-05-06. Retrieved மே 6, 2025.
    3. "U.S. cardinal's résumé, demeanor land him on 'papabile' lists". Angelusnews. ஏப்ரல் 30, 2025. Retrieved மே 6, 2025.
    4. 1 2 "The first American pope? This cardinal has the best chance of making history in this conclave". National Catholic Registry Online. ஏப்ரல் 30, 2025. Retrieved மே 6, 2025.
    கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
    முன்னர் திருத்தந்தை
    மே 8, 2025 முதல்
    பதவியில் உள்ளார்